Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டைகள் ரத்தா ? .. அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டைகள் ரத்தா ? .. அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

By: vaithegi Wed, 11 Oct 2023 11:49:05 AM

சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டைகள் ரத்தா ?  .. அமைச்சர் சக்கரபாணி விளக்கம்


சென்னை: சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி ..உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் 5 கிலோ அரிசி வழங்குகிறது. இந்நிலையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிக்கும் வகையில், ‘இணையவழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்’ (‘இ-கேஒய்சி’) என்ற முறையை அறிமுகம் செய்து உள்ளது.

எனவே இதன்படி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பொது விநியோக திட்ட அங்காடியில் உள்ள கருவியில் கைவிரல் ரேகை அல்லது கருவிழி பதிவு மூலம் தங்கள் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு, 45 சதவீத குடும்ப அட்டைதாரர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

minister chakrapani,personal details,family cards ,அமைச்சர் சக்கரபாணி ,சுய விவரங்கள்,குடும்ப அட்டைகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் ஓய்வாக இருக்கும்போதோ, பொருட்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

‘குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும்’ என்று சில இடங்களில் தவறுதலாக கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்டதும், அவ்வாறு செய்ய கூடாது என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப இவ்விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதையடுத்து அவ்வாறு இயலாவிட்டால், இதற்காக சிறப்பு முகாம் நடத்தவோ, வீட்டுக்கே சென்று புதுப்பிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதற்காக, குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என அவர் கூறினார்.

Tags :