Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா இருக்கிறதா? சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா இருக்கிறதா? சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

By: Nagaraj Fri, 18 Sept 2020 9:38:14 PM

வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா இருக்கிறதா? சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி... வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதா என்று சர்வேதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

சமீப காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பது பற்றி ஆய்வினை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வெள்ளி கிரகம் மீது விஞ்ஞானிகள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். பிரிட்டனின் வேல்ஸ் பல்கலை மற்றும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் பாஸ்பைன் வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

volcano,phosphine gas,venus,chance ,எரிமலை, பாஸ்பைன் வாயு, வெள்ளி கிரகம், வாய்ப்பு

பாஸ்பைன் வாயு, குறிப்பிட்ட பாக்டீரியாக்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை என்பதால், வெள்ளி கிரகத்தில் பாக்டீரியாக்கள் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.ஆனால், சாதாரணமாக 900 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ள வெள்ளி கிரகத்தில், உயிரினங்கள் இருக்க வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆனால் தற்போது வெளிப்பட்டுள்ள பாஸ்பைன் வாயு, வெள்ளி கிரகத்திலுள்ள எரிமலையிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tags :
|