Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாஜ்மஹாலுக்கு வர்றீங்களா... அப்போ கொரோனா பரிசோதனை கட்டாயம்

தாஜ்மஹாலுக்கு வர்றீங்களா... அப்போ கொரோனா பரிசோதனை கட்டாயம்

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:16:23 PM

தாஜ்மஹாலுக்கு வர்றீங்களா... அப்போ கொரோனா பரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: கொரோனா பரிசோதனை கட்டாயம்... தாஜ்மஹாலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்ரோ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, புதுடெல்லி, சீனாவில் தற்போது திடீரென கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

ஓமிக்ரானின் PF.7 துணை வைரஸ்கள் BA.5.2.1.7 வைரஸை ஒத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் மிகவும் தொற்றுநோயானது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

corona test,taj mahal,tourists,corona test,tourists,taj mahal , கொரோனா பரிசோதனை, சுற்றுலா பயணிகள், தாஜ்மஹால்

இந்த PF7 வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கடந்த அக்டோபரில் குஜராத்தில் 2 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அக்ரோ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :