Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் உரிமையை நீங்கள் நீர்த்துப்போகச் செய்கிறீர்களா? - ரன்தீப் சுர்ஜேவாலா

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் உரிமையை நீங்கள் நீர்த்துப்போகச் செய்கிறீர்களா? - ரன்தீப் சுர்ஜேவாலா

By: Karunakaran Fri, 10 July 2020 11:10:37 AM

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் உரிமையை நீங்கள் நீர்த்துப்போகச் செய்கிறீர்களா? - ரன்தீப் சுர்ஜேவாலா

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன.

இருப்பினும் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. தற்போது சுமூக நிலை எட்டியதன்படி, சீன படைகள் எல்லையில் இருந்து பின்வாங்கின. இந்நிலையில், லடாக் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

randeep surjewala,india,calvan valley,ownership ,ரன்தீப் சுர்ஜேவாலா, இந்தியா, கால்வன் பள்ளத்தாக்கு, உரிமை

இதுகுறித்து ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதிக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி உருவாக்கப்பட்டு உள்ளதா? எல்லையில் இருந்து நமது படைகள் 2.4 கி.மீ. தூரத்துக்கு வாபஸ் பெறப்பட்டு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், ரோந்து பாயிண்ட்-14 விவகாரத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்கிறதா? கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் உரிமையை நீங்கள் நீர்த்துப்போகச் செய்கிறீர்களா? இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|