Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கத்தாருக்கு போறீங்களா... கவனமாக இருங்க: தன் நாட்டு ரசிகர்களை எச்சரித்த பிரான்ஸ்

கத்தாருக்கு போறீங்களா... கவனமாக இருங்க: தன் நாட்டு ரசிகர்களை எச்சரித்த பிரான்ஸ்

By: Nagaraj Sun, 13 Nov 2022 1:18:26 PM

கத்தாருக்கு போறீங்களா... கவனமாக இருங்க: தன் நாட்டு ரசிகர்களை எச்சரித்த பிரான்ஸ்

பிரான்ஸ்: ரசிகர்களுக்கு எச்சரிக்கை... கத்தார் செல்லும் பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் பாதுகாப்பு கருதி பர்னர் போன்களைப் பயன்படுத்த வேண்டும் என தொடர்புடைய நிறுவனம் எச்சரித்துள்ளது.

கத்தார் நாட்டின் விதிகளுக்கு உட்பட்டு, அலைபேசிகளை பயன்படுத்த வேண்டும் எனவும், ஆபாச படங்கள் உள்ளிட்டவைகளை நீக்கிவிட்டு கத்தார் செல்லும்படியும், இல்லையெனில் கடுமையான தண்டனைகளுக்கு இலக்காக நேரலாம் எனவும் எச்சரித்துள்ளது.

qatar,france,fans,warning,football match ,கத்தார், பிரான்ஸ், ரசிகர்கள், எச்சரிக்கை, கால்பந்து போட்டி

எந்த தனிப்பட்ட தகவல்களும் இல்லாத அலைபேசிகள் அல்லது உங்களது பழைய அலைபேசியை பயன்படுத்துவதாக இருந்தாலும் சிறப்பு என பிரான்ஸ் அரசின் CNIL நிர்வாகம் கூறியுள்ளது.

குறிப்பாக எந்த பாதுகாப்பு அச்சுறுதலும் இல்லாத பர்னர் போன்களைப் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. மேலும், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவைகளை உங்கள் அலைபேசியில் இருந்து நீக்கிவிட்டு செல்லவும்.

ஒரு மாத காலம் நீளும் கால்பந்து திருவிழாவிற்கு ஒரு மில்லியன் பார்வையாளர்களை கத்தார் எதிர்பார்க்கிறது. மட்டுமின்றி, கத்தார் செல்லும் கால்பந்து ரசிகர்கள் தங்கள் அலைபேசிகளில் இரண்டு முக்கிய செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்ளவும் கத்தார் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ கால்பந்து உலகக் கோப்பை செயலியான Hayya மற்றும் கொரோனா தொற்று தொடர்பான Ehteraz செயலி, இவை இரண்டும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|