Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற புதன்கிழமை மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகள்

வருகிற புதன்கிழமை மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகள்

By: vaithegi Tue, 07 Mar 2023 3:34:31 PM

வருகிற புதன்கிழமை மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: தமிழக அரசு சார்பில் இயங்கி வரும் மின்சார துறையின் கீழ் பல துணை மின் நிலையங்கள் செயல்பட்டு கொண்டு வருகின்றன. இந்த துணை மின் நிலையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணி நடைபெறும்.

அதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும். இந்நிலையில் சென்னையில் முக்கிய பகுதிகளில் வருகிற மார்ச் 8 ஆம் தேதி மின் விநியோகம் தடை ஏற்படும் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், யில் புதன்கிழமை (மார்ச் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக வியாசர்பாடி, அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

power supply interruption,power maintenance work , மின் விநியோகம் தடை ,மின்வாரிய பராமரிப்பு பணி


மேலும் அது மட்டுமில்லாமல் அம்பத்தூர் பகுதிகளில், முகப்பேர் மேற்கு பிளாக், மோகன்ராம் நகர்,என்.என்.எஸ், எச்.ஐ.ஜி, எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், ரெட்டிபாளையம் பகுதி, வானகரம் ரோடு, பொன்னியம்மன் நகர், சங்கர் சீலிங்க் ரோடு,நலபள்ளி சாலை, பள்ளி சாலை, வெள்ளாளர் தெரு, சந்தோசம் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும்

இதையடுத்து வியாசர்பாடி பகுதிகளில், சத்தியராஜ் நகர், ராயல் அவென்யூ, செம்பியம் கே,கேஆர் நகர், அம்பேத்கர் நகர்,பர்மா காலனி, திருவள்ளுவர் தெருமற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :