லக்கேஜ் எடுக்கச் சென்ற பயணிகள் மத்தியில் தகராறு... தாக்குதலால் பரபரப்பு
By: Nagaraj Thu, 25 May 2023 09:51:21 AM
சிகாகோ: சரமாரியாக தாக்கிக் கொண்டனர்... அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் லக்கேஜ் எடுக்கச் சென்ற பயணிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை காலை விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மூன்றாவது முனையத்தில் தங்களது லக்கேஜ்களை எடுக்கச் சென்றுள்ளனர்.
அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டதில், 24 வயது இளம்பெண்ணை 2 இளைஞர்கள் தாக்கியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சண்டையில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் விலக்கி விட்டனர். இளம்பெண்ணை தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :
assault |
teen |
police |
arrest |