Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்குவாதம் செய்த ஊழியர் டிஸ்மிஸ்... அசால்டாக எமோஜி அனுப்பினார்

வாக்குவாதம் செய்த ஊழியர் டிஸ்மிஸ்... அசால்டாக எமோஜி அனுப்பினார்

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:25:52 PM

வாக்குவாதம் செய்த ஊழியர் டிஸ்மிஸ்... அசால்டாக எமோஜி அனுப்பினார்

நியூயார்க்: வாக்குவாதம் செய்த ஊழியரை வேலையை விட்டு தூக்கினார் எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அட ோய்யா என்பது ோல் ஊழியரோ செம அசால்ட்டாக Salute என்று எமோஜி அனுப்பி உள்ளார்.

எலான் மஸ்க் டுவிட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

மேலும், அந்நிறுவன சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். சமீபத்தில் டுவிட்டரில் செயலி சில நாடுகளில் மிகவும் நிதானமாக இயங்குவதாக கூறி டுவிட் ஒன்றில் எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார்.

emoji,employee,argument,elon musk,firing ,எமோஜி, ஊழியர், வாக்குவாதம், எலான் மஸ்க், பணி நீக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை Twitter மிகவும் மெதுவாக இயங்கியது அதற்கு என்ன செய்தீர்கள்? என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த Eric Frohnhoefer என்ற ஊழியர், கடந்த 6 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்படி நீங்கள் கூறுவது தவறு என்று டுவீட் செய்தார்.

இதனால், இவர்களுக்குள் டுவிட்டரில் மோதல் வெடித்தது. இந்த வாக்குவாதம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சென்றது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற எலான் மஸ்க் அந்த ஊழியரையே அதிரடியாக அப்பொழுதே வேலையை விட்டு நீக்கினார். அதற்கு அந்த ஊழியர் தில்லாக Salute என்று எமோஜி அனுப்பி பதிலளித்தார். ஊழியர் பணி நீக்கம் மற்ற ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|