Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சரியான பயிற்சி இல்லாததால் ரேஷன் கடைகளில் நடக்கும் வாக்குவாதங்கள்

சரியான பயிற்சி இல்லாததால் ரேஷன் கடைகளில் நடக்கும் வாக்குவாதங்கள்

By: Nagaraj Thu, 15 Oct 2020 11:27:32 AM

சரியான பயிற்சி இல்லாததால் ரேஷன் கடைகளில் நடக்கும் வாக்குவாதங்கள்

சரியான பயிற்சி இல்லாத பிரச்னைகளால் ரேஷன் கடைகளில் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகிறது.

கடலுார் மாவட்டத்தில் சர்வர் கிடைக்காமல், கார்டு தாரர்களுக்கு விரைவாக பொருட்கள் வழங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் ஊழியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், பரபரப்பு நிலவி வருகிறது.

இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியை போக்க 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை இருக்கும் இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மின்னணு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக ரேஷன் கடைகளில் உள்ள இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்டன. இதையடுத்து 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கடை' திட்டத்தை முதல்வர் இ.பி.எஸ்., கடந்த 1ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டம், சென்னை, கடலுார், காஞ்சிபுரம் உட்பட 32 மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயர்வோர், தங்கள் கார்டுகளை வைத்து அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

argument,agitation,ration shop,public ,வாக்குவாதம், பரபரப்பு, ரேஷன் கடை, பொதுமக்கள்

குடும்ப உறுப்பினரின் கைரேகை பதியும் 'பயோ மெட்ரிக்' முறையை பயன்படுத்தாவிட்டால், தற்போதுள்ள மின்னணு ரேஷன் கார்டு, ஆதாரில் உள்ள மொபைல் போன் எண்ணிற்கு வரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல்லை பயன்படுத்தியும், தற்போதுள்ள ரேஷன்கார்டு 'ஸ்கேனிங்' முறையை பின்பற்றியும் அத்தியாவசிய பொருட்களை பெறலாம்.

கடலுார் மாவட்டத்தில் 10 தாலுக்காகளில், 7 லட்சத்து 35 ஆயிரத்து 275 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன.

1,000க்கும் அதிகமான ரேஷன் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.கடந்த 1ம் தேதி முதல் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல கடைகளில் (சர்வர்) இணையதள தொடர்பு கிடைப்பதில் சிக்கலாகி, கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

நகர் புறங்களில் உள்ள கடைகளில் கடந்த காலங்களில் தினசரி 150 முதல் 200 அட்டை தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது ஒரு கார்டு தாரருக்கு ஸ்கேன் செய்து, பொருட்களை வழங்க 20 முதல் 25 நிமிடங்கள் வரை தேவைப்படுவதால், தினசரி 35 முதல் 50 கார்டுதாரர் களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடிகிறது.

கிராமப்புறங்களில் ஏற்கனவே தினசரி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பொருட்கள் வழங்கிய நிலையில், தற்போது 20 முதல் 40 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடிகிறது. கிராமங்களில் சிக்னல் கிடைக்காமல் சர்வர் கிடைப்பதில் கூடுதல் நேரமாகிறது.

வேறு பகுதியைச் சேர்ந்த கார்டுதாரர் வரும் போது, பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வழங்கும் விதம் குறித்து சில ஊழியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாமல் கால தாமதம் ஏற்படுகிறது.இதனால், பல கடைகளில் ரேஷன் பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால், பரபரப்பு நிலவி வருகிறது.

Tags :