Advertisement

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய அரியலூர்!

By: Monisha Tue, 01 Dec 2020 3:55:59 PM

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய அரியலூர்!

தமிழகத்தின் சிறிய மாவட்டமான பெரம்பலூர் நவம்பர் 16-ந்தேதி புதிய தொற்று இல்லாத நாளாக மாறியது. நேற்றைய தினமும் பெரம்பலூரில் புதிய தொற்று எதுவும் இல்லை. இந்தநிலையில் தற்போது பெரம்பலூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டமும் தொற்று இல்லாத மாவட்டமாக நேற்று மாறியது. நேற்றைய பரிசோதனை முடிவில் அரியலூரில் ஒருவர் கூட கொரோனாவால் கண்டறியப்படவில்லை.

அரியலூரில் உள்ள தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சுகாதாரத்துறையின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக தொற்றுகள் குறைந்து நேற்றைய தினம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.

ariyalur,corona virus,infection,treatment,death ,அரியலூர்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 4,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 4,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 88 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திட்டமிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், குறைக்கப்படாத கொரோனா பரிசோதனைகளால் அரியலூரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூலம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூரை விரைவில் அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :