Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

By: Monisha Mon, 06 July 2020 11:51:43 AM

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் முன் வரிசையில் நின்று பணி செய்பவர்கள் காவலர்களே. அதிலும் சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் கொரோனா நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

chennai,coronavirus,vulnerability,armed forces police,dead ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,ஆயுதப்படை காவலர்,உயிரிழப்பு

சென்னை காவல்துறையில் 1,302 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசார் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான நாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் ஆயுதப்படை பிரிவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :