Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகோர்னோ-காராபாக் எல்லை போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம்

நாகோர்னோ-காராபாக் எல்லை போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம்

By: Karunakaran Sat, 10 Oct 2020 3:21:39 PM

நாகோர்னோ-காராபாக் எல்லை போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம்

நாகோர்னோ-காராபாக் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இந்த மோதலில் அசர்பைஜானுக்கு துருக்கி ஆயுதம் வழங்குவதுடன், சிரியா, லிபியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை சண்டையில் களமிறக்கி நேரடி உதவி செய்து வருகிறது.

துருக்கியின் தலையீட்டிற்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இரு நாடுகளின் படைகளும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த மோதலில் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், மோதலில் பொதுமக்கள், அசர்பைஜான் படையினர், அர்மீனிய படையினர், அர்மீனிய ஆதரவு நாகோர்னோ-காராபாக் கிளர்ச்சி படையினர் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

armenia,azerbaijan,nagorno-karabakh,border war ,ஆர்மீனியா, அஜர்பைஜான், நாகோர்னோ-கராபாக், எல்லைப் போர்

பல்வேறு நாடுகள் இந்த மோதலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. இருப்பினும் தொடர்ந்து அசர்பைஜான், அர்மீனிய படையினரிடையே மோதல் அதிகரித்து கொண்டே சென்றது. தாக்குதல் குறித்து இருநாடுகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்த இருநாடுகளும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்த அர்மீனியா-அசர்பைஜான் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும் சண்டையின்போது சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.

Tags :