Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி

By: Karunakaran Thu, 12 Nov 2020 07:47:43 AM

நகோர்னோ-கராபாத் மாகாணத்தை முன்வைத்து நடந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வி

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு என தனியாக பாதுகாப்பு படைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தன்னாட்சி பகுதிக்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. அன்றில் இருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.

armenia,azerbaijan,nagorno-karabad,battle ,ஆர்மீனியா, அஜர்பைஜான், நாகோர்னோ-கராபாத்,போர்

பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அசர்பைஜான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு நகோர்னோ-கராபத் மாகாணத்தில் இருந்த படையினர் பதிலடி கொடுத்து வந்தனர். நகோர்னோ-கராபத் மாகாண படையினருக்கு அர்மீனியா ஆதரவு அளித்ததால் இந்த சண்டை அர்மீனியா-அசர்பைஜான் இடையே நேரடி போரை உருவாக்கியது.

கடந்த சில வாரங்களாக கடுமையாக நடந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது. இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் இடையே ரஷியா முன்னிலையில் நேற்றுமுன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ-கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நகோர்னோ-கராபத் மாகாணப்பகுதிகளை அசர்பைஜானிடம் இழந்ததை கண்டித்து பிரதமர் நிக்கோல் பஷின்யானுக்கு எதிராக அர்மீனிய தலைநகரில் நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவங்களால் அர்மீனியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :