Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநிலம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பயனர்கள் ஆதாருடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கவில்லை

மாநிலம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பயனர்கள் ஆதாருடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கவில்லை

By: vaithegi Wed, 01 Mar 2023 2:49:04 PM

மாநிலம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பயனர்கள் ஆதாருடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கவில்லை

சென்னை: 1.5 லட்சம் பயனர்கள் கட்டணம் செலுத்துவதில் இனி சிக்கல் ... தமிழகத்தில் மின் நுகர்வோர்களின் முழு விவரங்களை அறியும் நோக்கிலும் மின் சேவை பெறுவதில் நடைபெறும் குளறுபடிகளை கண்டறியவும் அரசு மின் நுகர்வோர்கள் தங்களது ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

எனவே அதன் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் முதல் ஆதார் – மின் இணைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இடையில் மின் வாரியத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக மின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆதார் – மின் இணைப்பு எண் பணியை மேற்கொள்ள 2022 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

aadhaar,electricity connection ,ஆதார், மின் இணைப்பு

இதையடுத்து அதன் பிறகு கூடுதலாக கால அவகாசம் பிப். 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதுவரை வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி இதற்கு மேல் ஆதாருடன் மின் நுகர்வோர் எண்ணை இணைக்க கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என மின்வாரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் 1.5 லட்சம் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

Tags :