Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 தேர்வில் சுமார் 1.50 தேர்வர்கள் பங்கேற்கவில்லை

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 தேர்வில் சுமார் 1.50 தேர்வர்கள் பங்கேற்கவில்லை

By: vaithegi Thu, 30 Mar 2023 3:36:49 PM

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 தேர்வில் சுமார் 1.50 தேர்வர்கள் பங்கேற்கவில்லை

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 கடந்த மாதம் நடைபெற்றது.இதனை அடுத்து இந்த தேர்வில் சுமார் 1.50 தேர்வர்கள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் ....

தமிழகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தாள் – 2 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பல மையங்களில் காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெற்றது. முதன் முதலாக இத்தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

candidates,teacher qualification paper ,தேர்வர்கள் ,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்

இதையடுத்து இந்த தேர்வை எழுத சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 2,54,224 மட்டுமே தேர்வை எழுதினர். சுமார் 1,47,632 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் 2% தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 98% பேர் தோல்வி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று கடந்த வருடம் நடைபெற்ற TET தாள் – 1 தேர்வில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :