Advertisement

உலகம் முழுவதும் சுமார் 82,64,648 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Wed, 17 June 2020 5:38:41 PM

உலகம் முழுவதும் சுமார் 82,64,648 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் சுமார் 82,64,648 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

worldwide,coronavirus virus,usa,brazil,russia ,உலகம் முழுவதும்,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,பிரேசில்,ரஷ்யா

உலகம் முழுவதும் இதுவரை 82,64,468 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 43,21,498 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ரஷியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் தற்போது நான்காம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் 22,08,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,132 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 9,28,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,456 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|