Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் அடுத்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க ஏற்பாடு

டெல்லியில் அடுத்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க ஏற்பாடு

By: Karunakaran Sun, 14 June 2020 12:47:19 PM

டெல்லியில் அடுத்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க ஏற்பாடு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 958 ஆக உள்ளது. இதில் 14 ஆயிரத்து 945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

delhi,coronavirus,bed,arvind kejriwal ,டெல்லி,படுக்கை,கொரோனா,அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனாவுக்கு 22,742 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு இதுவரை 1,271 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக கூடும் என்பதால் கொரோனா நோயாளிகளுக்கு புதிய படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, 20 ஆயிரம் புதிய படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஓட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகளும், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகளும் மற்றும் நர்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகளும் தயார் செய்ய டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|
|