Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்... உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்... உச்சநீதிமன்றம் தீர்ப்பு

By: Nagaraj Mon, 07 Aug 2023 8:21:31 PM

செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்... உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி: கைது செய்தது செல்லும்... செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சரியானது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் ஏ. எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

supreme court,go,arrest,enforcement. senthil balaji ,உச்சநீதிமன்றம், செல்லும், கைது நடவடிக்கை, அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜி

கைது செய்யப்பட்ட பின் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கைது நடவடிக்கை செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உறுதி செய்தனர். செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

அனுபம் குல்கர்னி என்பவர் வழக்கில் கைது செய்த முதல் 15 நாட்களுக்குப் பின் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்ற தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யுமாறு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு நீதிபதிகள் ஏ. எஸ். போபன்னா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் பரிந்துரைத்துள்ளனர்.

Tags :
|
|