Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முறையாக பதில் அளிக்காமல் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததால் கைது

முறையாக பதில் அளிக்காமல் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததால் கைது

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:51:31 AM

முறையாக பதில் அளிக்காமல் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததால் கைது

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

investigation,non-cooperation,arrest,prosecution,diversion ,விசாரணை, ஒத்துழைப்பு இல்லை, கைது, வழக்கு, திசை திருப்பல்

இதையடுத்து, நாடியா மாவட்டத்தின் பாலாஷிபாரா தொகுதி திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,வும், மேற்கு வங்க ஆரம்ப பள்ளி கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவருமான மாணிக் பட்டாச்சார்யாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


இவர், அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காமல் வழக்கை திசை திருப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags :
|