Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ரயில்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:04:16 AM

ரயில்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்... இரவு நேரங்களில் ரயில்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நார்த் ஈஸ்ட் பிராண்டியர் ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக இரவு நேரங்களில் ரயில் விபத்து அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து ரயில்களை இயக்கிக் கொண்டிருப்பதால் இரவு நேரங்களில் டிரைவர்கள் கண் அயர்ந்து விடுகின்றனர். இதுவே பெரும்பான்மையான விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரம் அதிவிரைவு ரயில்களில் நிமிடத்திற்கு ஒரு முறை கால்களால் இயக்கக்கூடிய லிவர்களை டிரைவர்கள் இயக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த லிவர்கள் நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்பட விட்டால் அவசரக்கால பிரேக்குகள் உடனடியாக செயல்பட்டு ரயில் நின்று விடும்.

new tool,practice,artificial intelligence,technology,train ,புதிய கருவி, நடைமுறை, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ரயில்

இந்த நிலையில் அனைத்து வகை ரயில்களையும் பாதுகாப்பும் வகையில், இரவு நேரங்களில் ஏற்படும் ரயில் விபத்தை கட்டுப்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த நார்த் ஈஸ்ட் பிராண்டியர் ரயில்வே முடிவு செய்து இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்ஜின்களில் பயன்படும் வகையில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த கருவி இரவு நேரங்களில் டிரைவர்கள் கண்ணை அயர்ந்தால் உடனே அது எச்சரிக்கை ஒளியை எழுப்பி டிரைவர்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர உதவும் வகையில் இந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த புதிய கருவி ரயிலின் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு படுத்தப்பட்டு, அவசரக்கால பிரேக்குகளோடு இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் கருவி இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ரயில்வே வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய கருவி இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறது.

Tags :