Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களின் கவனத்தை ஈர்க்க செயற்கை நுண்ணறிவு கருவி... வருத்தப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

மாணவர்களின் கவனத்தை ஈர்க்க செயற்கை நுண்ணறிவு கருவி... வருத்தப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

By: Nagaraj Sat, 06 May 2023 5:45:13 PM

மாணவர்களின் கவனத்தை ஈர்க்க செயற்கை நுண்ணறிவு கருவி... வருத்தப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

சீனா: சீனாவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களின் கவனத்தை ஈர்க்க செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்துகிறது. அதாவது, இந்த கருவியை மாணவர்களின் தலையில் பொருத்தினால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை யார் கவனிக்கிறார்கள், யார் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதை இந்த சாதனம் கண்டுபிடிக்கும்.

கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம், ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகப்படுத்தியது.

Chat GPD ஆனது, கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பது, ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவலைத் தொகுப்பது போன்ற மொழி தொடர்பான செயல்பாடுகளை மிக வேகமாகச் செய்கிறது. AI பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதை முறையாகக் கையாளாவிட்டால், மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ar rahman,chat gpt,talk, ,ஏஆர் ரஹ்மான், ஓபன் ஏஐ நிறுவனம், சாட் ஜிபிடி

சீனாவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்களின் கவனத்தை ஈர்க்க செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்துகிறது. அதாவது, இந்த கருவியை மாணவர்களின் தலையில் பொருத்தினால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை யார் கவனிக்கிறார்கள், யார் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதை இந்த சாதனம் கண்டுபிடிக்கும். மேலும் இது பற்றிய தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்புவார்கள்.

இது தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இளம் தலைமுறைக்காக நான் வருந்துகிறேன்.

அவர்கள் ஒரே நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா, சபிக்கப்பட்டவர்களா? அதற்கு காலம் பதில் சொல்லும் என்றார். இசையமைப்பாளர் தமன், ரஹ்மானின் பதிவை ரீ-ட்வீட் செய்து, ‘முற்றிலும் உண்மை சார்’ என்று கூறியுள்ளார்.

Tags :
|