குறுகிய கால சலுகையாக பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்
By: vaithegi Mon, 19 Dec 2022 7:10:56 PM
சென்னை: மெட்ரோ ரயிலில் இலவச பயணம் .... மெட்ரோ நிர்வாகம் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளை தீவிரம் காட்டி விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த பணிகள் முடிந்த பின் பயணிகளுக்கு இலவச பயணத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியது.
எனவே அதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களில் கடந்த சில ஆண்டுகளாக சேவை நடந்து வரும் நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
அதன்படி, 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்திற்கு இந்த பணி நடைபெற்று வருகிறது. புறநகர் ரயில் சேவையாக உள்ள இத்திட்டத்தின் பணிகள் முடிந்த பின், 3 வழித்தடங்களிலும் 2 வாரத்திற்கு குறுகிய கால சலுகையாக பொதுமக்கள் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.