Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 26 Oct 2022 2:45:23 PM

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு ..... வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரளாவில் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாகவும் தமிழகத்தில் கோடை காலத்தில் கூட கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் முக்கிய அணைகள் மற்றும் பிற நீர் நிலைகள் நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேறி பொது இடங்களில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.

இதையடுத்து இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து கொண்டு வருகிறது.

heavy rain,chennai ,கனமழை,சென்னை

மேலும் அதே போன்று உத்திர பிரதேசம், அசாம், மேகாலயா, வங்காள தேசம் ஆகிய வட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புயலானது வங்கதேசத்தில் டிங்கோனா மற்றும் சாண்ட்விப் பகுதியில் நேற்று இரவு கரையை கடந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்தாக தமிழக்த்தில் அக். 29ம் தேதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.29,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags :