Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் நேற்று மட்டும் 18,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் நேற்று மட்டும் 18,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்

By: vaithegi Tue, 21 June 2022 1:35:02 PM

பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய  நிலையில் நேற்று மட்டும்  18,000 பேர்  விண்ணப்பித்துள்ளனர்

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு தேர்வுகள் 10,11,12ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1 – 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று 0,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வெழுதிய மாணவர்களில், 93.76 சதவீதத்தினர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூன் 24ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் கலை & அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து நேற்று பொறியியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை தொடங்கியது.

online .general examination,results,students ,ஆன்லைன் .பொதுத்தேர்வு ,முடிவுகள் ,மாணவிகள்

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 18,763 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் தாங்களாகவே அல்லது பள்ளிகள் வாயிலாகவோ விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விண்ணப்பித்ததில் 4,199 பேர் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், 790 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி தொடங்கும் என்றும் தொடர்ந்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :