Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சம்மனில் தெரிவித்தபடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடி

சம்மனில் தெரிவித்தபடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடி

By: Nagaraj Tue, 18 July 2023 6:30:12 PM

சம்மனில் தெரிவித்தபடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடி

சென்னை: சம்மனில் தெரிவித்தபடி சரியாக மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கனிமவள முறைகேடு மற்றும் அது தொடர்பான அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோர் வசிக்கும் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.

இதில், 70 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களை கண்டெடுத்த அதிகாரிகள், ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

doctors,lawyers,information,enforcement,attended ,மருத்துவர், வழக்கறிஞர்கள், தகவல்கள், அமலாக்கத்துறை, ஆஜரானார்

சோதனைக்கு இடையே அமைச்சர் பொன்முடியை இரவு 8 மணி வாக்கில் சென்னை சென்னை சாஸ்திரி பவன் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதிகாலை 3 மணி வரை நடந்த விசாரணைக்குப் பின் பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மனும் வழங்கப்பட்டது. சம்மனில் தெரிவித்தபடி சரியாக மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

கதவு மூடப்பட்ட அறைக்குள் பொன்முடியிடம் விசாரணையை துவக்கினர் அமலாக்கத்துறை அதிகாரிகள். கவுதம சிகாமணி தமது கையில் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். பொன்முடியுடன் ஒரு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்கள் 2 பேர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :