Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி-20 உச்சி மாநாடு நாளை துவங்க இருக்கும் நிலையில் இந்தியா 5 நாடுகளுடன் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு நாளை துவங்க இருக்கும் நிலையில் இந்தியா 5 நாடுகளுடன் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவிப்பு

By: vaithegi Fri, 08 Sept 2023 4:15:35 PM

ஜி-20 உச்சி மாநாடு நாளை துவங்க இருக்கும் நிலையில் இந்தியா 5 நாடுகளுடன் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவிப்பு

இந்தியா: ஜி-20 உச்சி மாநாட்டில் அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்போகும் இந்தியா ... ஜி-20 உச்சி மாநாடு இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறயிருக்கிறது. மேலும், இம்மாநாட்டில் பல மாநில தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதனையடுத்து, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொரிசியஸ், வங்க தேசம் உள்ளிட்ட 5 நாடுகளுடன் இந்தியா அரசு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

india,g-20 summit,talks ,இந்தியா ,ஜி-20 உச்சி மாநாடு ,பேச்சுவார்த்தை

அதாவது, நாளை முதல் பேச்சுவார்த்தை தொடர இருக்கும் நிலையில் மொரிசியஸ் மற்றும் வங்க தேசம் நாட்டு அதிபர் மற்றும் பிரதமர்கள் நரேந்திர மோடி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பாதுகாப்பு, நிதி உள்ளிட்டவை குறித்து கலந்தோசிக்க உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. மேலும், இன்று இரவு அமெரிக்க அதிபர் டெல்லி வந்தடைய இருக்கும் நிலையில் இரவு 8 மணிக்கு பிரதமருடான பேச்சுவார்த்தை தொடரும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Tags :
|