Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் .. நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் இன்று காலை முதல் உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் .. நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் இன்று காலை முதல் உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

By: vaithegi Wed, 17 Aug 2022 3:48:54 PM

மேட்டூர்  ..  நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் இன்று காலை முதல் உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 20 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என்று மொத்தம் 20 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

mettur,neervarathu ,மேட்டூர்  ,நீர்வரத்து

மேலும் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 31-ந் தேதி முதல் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளதால் இன்று காலை முதல் உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அணை மின் நிலையங்கள் வழியாக மட்டுமே 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

Tags :
|