Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

By: vaithegi Sun, 16 July 2023 10:28:18 AM

தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிரடியாக அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலையானது பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

அரசு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து மக்களுக்கு ஓரளவிற்கு உதவி செய்கிறது. இந்த நிலையில் தக்காளி விலை குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

tomato,sale ,தக்காளி ,விற்பனை

அதில் முதல்வர் ஸ்டாலின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறார். அதில் எங்கெல்லாம் தக்காளி விலை உயர்வு இருக்கிறதோ அங்கெல்லாம் கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வாங்கி, ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.

அதனால் தக்காளி விலை படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும், உற்பத்தி குறைவாக இருப்பதால் கர்நாடகா மாநிலங்களிலிருந்து தற்போது வாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.


Tags :
|