Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பிற்காக முக்கிய எச்சரிக்கை விடுப்பு

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பிற்காக முக்கிய எச்சரிக்கை விடுப்பு

By: vaithegi Wed, 13 Sept 2023 3:41:05 PM

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பிற்காக முக்கிய எச்சரிக்கை விடுப்பு

சென்னை: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு ...தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாணவ மாணவியர்களின் பாதுகாப்புக்காக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய சுற்றறிக்கையை அனுப்பிவுள்ளது.

அதாவது, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மாணவ, மாணவியர்கள் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி வகுப்பறைகள் ஈரப்பதத்துடன் காணப்படலாம்.

students,rainy season ,மாணவ, மாணவியர்,மழைக்காலம்

எனவே, பள்ளிகளில் எவ்வித மின் கசிவும் ஏற்படாவண்ணம் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, பள்ளி வளாகங்களில் மரம் விழும் நிலையில் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மழை நீர் பள்ளிகளில் தேங்காத வண்ணம் சரிப்படுத்த வேண்டும் என்றும்அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை மூடி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதிலும், குறிப்பாக மழைக்காலங்களில் தொற்று நோய்கள் அதிகமாக பரவும் என்பதனால் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Tags :