Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 12:40:29 PM

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

தமிழகம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அடுத்த மாதத்திலிருந்து பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.

இதனால் அந்தந்த ஊர்களில் மருத்துவ முகாம்களை நடத்தவும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது மக்களுக்கு குளோரின் கலந்த நீரை வழங்கும் படியும், நிலவேம்பு குடிநீரை வினியோகம் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

dengue fever,federal ministry of health ,டெங்கு காய்ச்சல்,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் மாவட்ட சுகாதார இயக்குனரகத்திற்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது வீட்டை சுற்றியுள்ள டேங்குகள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி பொதுமக்களுக்கு சுகாதார துறை தரப்பில் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், டெங்கு காய்ச்சலின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனையில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் வெகு விரைவாக பரவக்கூடியது என்பதால் கூடிய வரைக்கும் பாதுகாப்பாகவும் வீட்டை சுற்றி குடிநீர் தேங்காமல் முறைப்படி கவனிக்கும் படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலேயே நிலவேம்பு குடிநீரை தயார் செய்து குடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :