Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிப்பதால் உபரிநீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிப்பதால் உபரிநீர் திறப்பு

By: vaithegi Sun, 23 Oct 2022 12:53:17 PM

பவானிசாகர் அணையின்  நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிப்பதால் உபரிநீர் திறப்பு

ஈரோடு : உபரிநீர் திறப்பு ... தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இதையடுத்து இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து உயர்ந்தது. இதனால் கடந்த 17-ந் தேதி மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக 102 அடியை எட்டியது.

excess water,bhavanisagar dam ,உபரிநீர் ,பவானிசாகர் அணை

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் இந்த மாதம் இறுதி வரை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக பவானி ஆற்றில் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.


Tags :