Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி எழுப்பியுள்ள கேள்விகள்

பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி எழுப்பியுள்ள கேள்விகள்

By: Nagaraj Sun, 21 May 2023 07:09:26 AM

பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி எழுப்பியுள்ள கேள்விகள்

புதுடில்லி: பிரதமருக்கு முன் வைத்த கேள்வி... ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

prime minister modi,digital transaction,action,rs.2000 thousand,question ,பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனை, நடவடிக்கை, ரூ.2000 ஆயிரம் , கேள்வி

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரூ.2,000 நோட்டை முதலில் ஏன் அறிமுகம் செய்தீர்கள்?. ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையையும் விரைவில் எதிர்பார்க்கலாமா?.

70 கோடி இந்தியர்களிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை, அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வார்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய அவர் அந்த பதிவை பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார்.

Tags :
|