Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டுவதற்கான காரணங்களுடன் இரண்டாது கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய அசோக் கெலாட்

ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டுவதற்கான காரணங்களுடன் இரண்டாது கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய அசோக் கெலாட்

By: Karunakaran Sun, 26 July 2020 9:15:43 PM

ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டுவதற்கான காரணங்களுடன் இரண்டாது கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனால் சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.

சச்சின் பைலட்டை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. அதன்படி, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது.


ashok gelad,rajasthan,assembly,governor ,அசோக் கெலாட், ராஜஸ்தான், சட்டமன்றம், ஆளுநர்

சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட அசோக் கெலாட், சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி கேட்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அசோக் கெலாட் தனது பலத்தை நிரூபிக்க ஆளுநர் மாளிகைக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆளுநர் கடும் அதிருப்தி அடைந்து சட்டசபையை கூட்டுவதற்காக காரணம் மற்றும் தேதியுடன் கூடிய புதிய கடிதத்தை அளிக்க கூறினார்.

அதன்படி தற்போது ஆளுநருக்கு அசோக் கெலாட் ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டும் தேதி மற்றும் சட்டசபையை கூட்டுவதற்கான காரணங்களுடன் இரண்டாது கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில், ஜூலை 31ம் தேதி சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறி உள்ளார்.

Tags :