Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு... தொழில்களை முடக்கும் என்று எதிர்ப்பு

மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு... தொழில்களை முடக்கும் என்று எதிர்ப்பு

By: Nagaraj Fri, 19 Aug 2022 10:42:30 AM

மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு... தொழில்களை முடக்கும் என்று எதிர்ப்பு

மதுரை : தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது. பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின்கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன்: காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை சேமிக்க வசதிகள் செய்யாததால் ரூ. 1900 கோடி இழப்பு என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 90 சதவீத மக்களின் சம்பளம் ஆண்டுதோறும் 6 சதவீதம் அதிகரிப்பதில்லை. எனவே ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்துவதை கைவிட வேண்டும்.

திரையரங்குகள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், திருமண மண்டபங்கள், நோய் கண்டறியும், உடற்பயிற்சி மையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.05லிருந்து ரூ.9.50 ஆகவும், தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு உட்கட்டமைப்பு வசதிக்கு வளர்ச்சி கட்டணம் ஒரு இணைப்புக்கு ரூ.1400லிருந்து ரூ.2800 ஆக உயர்த்துவது ஏற்க முடியாதது. கட்டண உயர்வை கைவிட்டு மின் பகிர்மான கழகம் லாபம் அடையும் வகையில் செயலாற்ற வேண்டும்.

மடீட்சியா தலைவர் சம்பத்: சிறு, குறு நிறுவனங்களுக்கு இதுவரை 'பவர் பேக்டர்' கட்டுப்பாடு இல்லை. தற்போது குடிசைகள், வீடுகள் தவிர அனைத்து இணைப்புகளுக்கும் பவர் பேக்டர் உண்டு. இது குறித்து புரிதல் இல்லை. மின்சார தட்டுப்பாடு, மின்தடை உள்ள காலத்தில் 'பீக் ஹவர்' அமலானது. இந்த நேரத்தில் தொழில் நிறுவனங்கள் தங்கள் மின் பயன்பாட்டை குறைக்க கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது.

electricity tariff,rise,marginal level,people,vulnerability,small businesses ,மின்கட்டணம், உயர்வு, விளிம்பு நிலை, மக்கள், பாதிப்பு, சிறுதொழில்கள்

மின்சார தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் இம்முறை தேவையில்லை. இதுவரை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35 ஆக இருந்த நிலையான கட்டணம் 20 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணத்தை மின் பயன்பாட்டு கட்டணத்தில் கழிக்காமல் தனியாக வசூலிப்பது முறையல்ல. தற்போது மின் கட்டணம் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படும் என்பதை எப்படி நிர்ணயித்தனர் என தெரியவில்லை. மின் கட்டண உயர்வு அமலானால் மக்கள் பாதிப்பர். சிறுதொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்படும். எங்கள் கருத்துக்கு ஆணையம் சாதகமான முடிவை தரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாடு உணவு பொருள் வியாாபரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம்: தற்போது 'பீக் ஹவர்' 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பெரு நிறுவனங்கள் சூரிய மின்சக்தி, காற்றாலையில் மின்சாரம் தயாரிப்பதால் செலவு குறைவு. சிறு, நடுத்தர தொழில்கள் அரசு மின்சாரத்தை நம்பி உள்ளது. எச்.டி., டிமான்ட் கட்டணங்கள் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.350 முதல் ரூ.600 உயர்த்தப்படவுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு பழைய கட்டணம், பழைய டிமான்ட் சார்ஜஸ் தொடர வேண்டும்.

அப்பளம், வடகம் மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகன்: சிறு, குறு தொழில்களுக்கு நிலை கட்டணத்தை ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.35ல் இருந்து ரூ.100 முதல் 600 வரை உயர்த்தியது மனசாட்சியற்ற செயல். அதிக கிலோவாட் மின் இணைப்பு பெற்ற நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற கண்ணோட்டம் தவறு.

பிற பயனாளர்களுக்கு உயர்த்துவது போல் சிறு, குறு தொழில்களுக்கு யூனிட் 1க்கு 50 காசு மட்டுமே உயர்த்த வேண்டும். நிலையான,பீக் ஹவர் கட்டணங்களை தவிர்க்கலாம். மின் கட்டணத்தை உயர்த்தி சிறு தொழில்களை தமிழக அரசு அழித்துவிட வேண்டாம்.

பா.ஜ., தொழிற்துறை பிரிவு - சீனிவாச பாஸ்கரன்: விவசாயத்திற்கு அடுத்து நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது சிறு, குறு தொழில்கள் தான். மின்கட்டண உயர்வால் நிறுவனங்கள் பெரும் நஷ்டம் அடையும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க தயங்குவர். தி.மு.க., அரசு ஒரு பக்கம் 'இன்வெஸ்ட் இன் தமிழ்நாடு' என கூறிவிட்டு மறுபக்கம் கட்டணம் உயர்த்தி அவர்களை வரவிடாமல் செய்கிறது. விளிம்பு நிலை மக்கள் கடுமையாக பாத்திக்கப்படுவர். கட்டண உயர்வை பா.ஜ., கண்டிக்கிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பை கைவிடவேண்டும்.

Tags :
|
|