Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேட்டது 1000... கிடைத்ததோ 50...; வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டு

கேட்டது 1000... கிடைத்ததோ 50...; வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 21 June 2020 10:11:07 PM

கேட்டது 1000... கிடைத்ததோ 50...; வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டு

கேட்டது 1000... கிடைத்ததோ 50... தெலங்கானா அரசு 1000 வென்டிலேட்டர்கள் கேட்ட நிலையில், மத்திய அரசு 50 மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனை அடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் தெலங்கான மாநிலத்திற்கு குறைந்த அளவிலான வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள, தெலங்கான சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்டலா ராஜேந்திரா தங்கள் மாநிலத்திற்கு 1,000 வென்டிலேட்டர்கள் கோரிய நிலையில், 50 மட்டுமே கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

ventilators,charge,corona,telangana,blockchain ,வென்டிலேட்டர்கள், குற்றச்சாட்டு, கொரோனா, தெலங்கானா, தடுப்புப்பணிகள்

தெலங்கானா மாநிலம் கேட்ட வென்டிலேட்டர்கள் அனைத்தையும் பிரதமர் மோடி உத்தரவுப்படி, கொல்கத்தா மாநிலத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெலங்கானாவுக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய மருத்துவ வசதிகள் மற்றும் நிதியுதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இருப்பினும் மாநில அரசு சிறப்பாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'கொரோனாவை கட்டுப்படுத்த தெலங்கானா அரசு தவறிவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய புகாருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தெலங்கானாவில்தான் முதன்முதலாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டன. வெளிநாட்டு பயணிகளால் கொரோனா வேகமாக பரவியதையடுத்து, விமான சேவையை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்த முதல் நபர் முதல்வர் சந்திரசேகர் ராவ். மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறந்த முறையில் தீவிரமாக நடந்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் இதுவரை 7,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 203 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|