Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாம் மாநில பாஜக முதல்வர் ட்விட்டரில் பெயரை மாற்றினார்

அசாம் மாநில பாஜக முதல்வர் ட்விட்டரில் பெயரை மாற்றினார்

By: Nagaraj Wed, 26 July 2023 4:14:06 PM

அசாம் மாநில பாஜக முதல்வர் ட்விட்டரில் பெயரை மாற்றினார்

கவுகாத்தி: எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதால் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் தளத்தில் பாரத் என்று திருத்தியுள்ளார்.

அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஸ்ஸாம் முதல்வர், இந்தியா’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அமைக்கும் புதிய கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் தளத்தில் இந்தியாவை பாரத் என்று திருத்தியுள்ளார். தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘அஸ்ஸாம் முதல்வர் பாரத்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது குறித்து அவர், ‘எனது முந்தைய பக்கத்தில் அசாம், இந்தியா என குறிப்பிட்டு இருந்தேன்.

assam,bharat,chief,india,page,twitter, ,அசாம், இந்தியா, டுவிட்டர், பக்கம், பாரத், முதல்வர்

இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியபின் இதை திருத்த மறந்து விட்டேன். எனவே தற்போது பெருமையுடன் அசாம், பாரத் என திருத்தி விட்டேன். காங்கிரசில் உள்ள நண்பர்கள் சிலர் இந்த மாற்றத்துக்கு காரணம் கேட்டனர்.

இந்த விளக்கம் அவர்களுக்கு போதும் என நினைக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார். அசாம் முதல்-மந்திரியின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் குறைகூறியுள்ளது. திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என திட்டங்களுக்கு பெயர் வைக்கும் பிரதமர் மோடியிடம் இதை எடுத்துக்கூறுமாறு காங்கிரஸ் கூறியுள்ளது.

Tags :
|
|
|
|
|