Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

By: Nagaraj Tue, 10 Oct 2023 07:05:31 AM

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடில்லி: தேர்தல் தேதி அறிவிப்பு… மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல்கள் நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 ஆம் தேதி முடிவடைகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதியும், தெலங்கானாவில் நவ. 30 ஆம் தேதியும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மிஜோரம் மாநிலத்தில் நவ. 7 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவ. 7 மற்றும் நவ. 17 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் சுமார் 16.1 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அதாவது அரையிறுதிப் போட்டி போல் இந்த தேர்தல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

expires,term,election,date,notification,nov ,முடிவடைகிறது, பதவிக்காலம், தேர்தல், தேதி, அறிவிப்பு, நவம்பர்

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை காங்கிரஸ் 100 இடங்களிலும், பா.ஜ.க. 73 இடங்களிலும் வென்றது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு மூலம் காஙகிரஸ் கட்சியின் அசோக் கெலோட் ஆட்சியமைத்தார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க வேண்டுமானால் 46 இடங்களை வென்றிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 15 இடங்களே கிடைத்தன.

மிஜோரம் மாநிலத்தில் கடந்த 2018 தேர்தலில் மிஜோ தேசிய முன்னணி மொத்தம் உள்ள 40 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 4 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும் கைப்பற்றின. எஞ்சிய தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றனர்.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைத் தொகுதிகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியிலும், மிஜோரத்தில் டிசம்பரிலும் முடிவடைகின்றன.

Tags :
|
|