Advertisement

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு

By: vaithegi Wed, 11 Oct 2023 09:48:40 AM

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு

சென்னை: கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைகிறது ... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. 2023-24 -ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது.

இதனை அடுத்து சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவடைகிறது. இன்றைய கூட்டத்தொடரில் வேளாண் மண்டலத்தில்,

legislative assembly series,demands ,சட்டப்பேரவை கூட்டத் தொடர் ,கோரிக்கைகள்

மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது. இந்த சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது .ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்.

Tags :