Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கஞ்சா வியாபாரிகளில் ரூ.50 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

கஞ்சா வியாபாரிகளில் ரூ.50 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

By: Nagaraj Wed, 05 Oct 2022 9:16:53 PM

கஞ்சா வியாபாரிகளில் ரூ.50 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

சென்னை: கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டதட்ட 7 மாதங்களில் கஞ்சா வியாபாரிகளிடம் 50 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் காவல்துறையினர் கடந்த மார்ச் மாதம் முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்படி, 28.03.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்துவருகிறது.

report,cannabis dealers,assets,confiscation,freezing ,அறிக்கை, கஞ்சா வியாபாரிகள், சொத்துக்கள், பறிமுதல், முடக்கம்

கடந்த 7 நாட்களில், 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிகணக்குகள் முடக்கப்பட்டது.

இது வரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் முடக்கம் பட்டு 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு. 1006 இரண்டு மற்றும் நாண்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர், இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்” . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|