Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு

By: Nagaraj Mon, 19 Sept 2022 9:43:35 PM

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு

செங்கல்பட்டு: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: தலைவர் கலைஞர் வைத்திருந்த பாச உணர்வோடுதான் நான் இங்கே வந்திருக்கிறன். தேர்தலில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை சந்திப்பவன் அல்ல நான், என்றைக்கும் உங்களோடு இருப்பவன். மாற்றுத் திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரை சூட்டியர் தலைவர் கலைஞர். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்.

fulfillment,chief minister,pwd,government,demands ,நிறைவேற்றி தரும், முதல்வர், மாற்றுத்திறனாளிகள், அரசு, கோரிக்கைகள்

அந்த வகையில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவர்கள் நீங்கள். அதனால்தான் மாற்றுத் திறனாளிகள என்று பெயர் சூட்டி, அதனையே அரசாணையாக மாற்றியவர் தலைவர் கலைஞர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, தாம்பரம் ராஜா, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி, பொதுச்செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
|