Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 4:27:36 PM

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசு படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் செயல்பட்டு வருகின்றன. தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இருப்பினும் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பல மாகாணங்களில் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அரசுக்கு ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஆயுதம் ஏந்திய அரசு சார்பு போராளிகளுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல் ஏற்படுகின்றன.

13 pro-government militants,death,taliban attack,afghanistan ,13 அரசாங்க சார்பு போராளிகள், மரணம், தலிபான் தாக்குதல், ஆப்கானிஸ்தான்

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் உள்ள தாக்கர் மாகாணத்தில் லால குஷார் என்ற இடத்தில் அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின் போராளிகள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இருப்பினும் இந்த சண்டையில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல போராளிகள் படுகாயமடைந்தனர். தலீபான் பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஆனாலும், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags :
|