Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 20 Oct 2020 1:45:39 PM

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்புக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் கடந்த ஒரு மாத காலமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையில் குறிப்பிடத்தக்க உடன்படிக்கை எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது, ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் கோர் மாகாணத்தின் தலைநகர் சாக்சரணில் உள்ள போலீஸ் தலைமையகம் முன்பு நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்தனர்.

15 killed,car bomb blast,afghanistan,talibans attack ,15 பேர் கொல்லப்பட்டனர், கார் குண்டு வெடிப்பு, ஆப்கானிஸ்தான், தலிபான்கள் தாக்குதல்

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags :