Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Mon, 17 Aug 2020 5:09:55 PM

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

நேபாள நாட்டில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கொரோனா பாதிப்பினால் மக்கள் அவதியடைந்து வரும் சூழலில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் மக்கள் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரில் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பினால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றோருபுறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் கடந்த 14ந்தேதி காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 37 வீடுகள் இடிந்து விழுந்தன.

18 people dead,landslide,nepal,rescue ,18 பேர் இறப்பு, நிலச்சரிவு, நேபாளம், மீட்பு

இதுகுறித்து தகவலறிந்த நேபாள ராணுவம், ஆயுத காவல் படை மற்றும் நேபாள காவலர்கள் என 150 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் கப்லே கூறுகையில், 'கடந்த 14-ம் தேதி 11 உடல்கள் மீட்கப்பட்டன. 15-ம்தேதி 2 குழந்தைகள் உட்பட, 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மழைப் பொழிவு காரணமாக மீட்புப் பணி பகலில் மட்டும் தொடர்வதாக அவர் தெரிவித்தார். விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள மலைப் பகுதி என்பதால், அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|