Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலி

ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலி

By: Karunakaran Mon, 28 Sept 2020 09:37:44 AM

ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலி

உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையிலும் கூட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையிலான மோதல் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது, நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மேலும், ஆர்மீனிய படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

23 dead,fight,armenian,azerbaijani forces ,23 பேர் பலி, சண்டையிட்டனர், ஆர்மீனிய, அஜர்பைஜான் படைகள்

இந்த தாக்குதல்களில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் அங்கு மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக் மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்த மோதலினால் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags :
|