Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவில் கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

நைஜீரியாவில் கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

By: Karunakaran Mon, 20 July 2020 09:50:49 AM

நைஜீரியாவில் கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு

நைஜீரியாவில் போகோஹரம், ஐ.எஸ் போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நாட்டில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனால் பொருளாதார தேவைகளுக்காக அங்கு வாழும் மக்களில் சில குழுக்கள் உணவு பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கின்றனர்.

இத்தகைய குழுவினர் ஆயுதங்களுடன் கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு வாழும் மக்களை கொலை செய்து, வீடுகளை எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுக்களில் பன்டீட்ஸ் என்ற கொள்ளை கும்பல் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

nigeria,gun shoot,security forces,23 dead ,நைஜீரியா, துப்பாக்கிச் சூடு, பாதுகாப்புப் படையினர், 23 உயிரிழப்பு

பன்டீட்ஸ் என்ற கொள்ளை கும்பல் போகோஹரம் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் அவ்வப்போது நடைபெறுகிறது.

இந்நிலையில் நைஜீரியாவின் ஹட்சினா மாகாணம் ஜிபியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பன்டீட்ஸ் கொள்ளை கும்பல் பாதுகாப்புப்படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. நைஜீரிய பாதுகாப்பு படையை சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலரை கொள்ளை கும்பல் கடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :