Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 45 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 45 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Fri, 24 July 2020 09:48:16 AM

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 45 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன. தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை கண்டறிந்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

afghanistan,military,airstrike,45 dead ,ஆப்கானிஸ்தான், ராணுவம், வான்வழித் தாக்குதல், 45 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீரேட் மாகாணம் அட்ரஷ்ஹன் மாவட்டத்தின் ஹூம் சியார்ட் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசியத்தகவல்படி, அங்கு ஆப்கன் விமானப்படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

நேற்று முன்தினம் நடத்திய இந்த தாக்குதலில் 37 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :