Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைகை ஆற்றில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

வைகை ஆற்றில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

By: vaithegi Thu, 01 Sept 2022 1:20:04 PM

வைகை ஆற்றில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

மதுரை: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் தரை பாலங்கள் மூடப்பட்டுள்ளன. மதுரை, தேனி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணையில், தற்போது 70 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் திறந்து விடப்படுகிறது.

இதனால் வைகை ஆற்றில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றுடன் தொடர்பு உடைய தரை பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. அங்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் 'வைகை ஆற்றுக்குள் யாரும் இறங்க கூடாது' என அறிவுறுத்தி ஒண்டு வருகின்றனர்.

vaigai,water level ,வைகை ,நீர்மட்டம்

மதுரையில் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளை எடுத்து வந்து, வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம். வைகை ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் 'விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக எவரும் வைகை ஆற்றுக்கு வர வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து ஆற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டு உள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் "ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும், வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது" என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags :
|