Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து

கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து

By: vaithegi Wed, 16 Aug 2023 09:36:32 AM

கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை ,பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்து உள்ள நிலையில், இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வருகை புரிந்து கண்டு ரசிப்பது வழக்கமான ஒன்று.

இதையடுத்து கடந்த சில தினங்களாக வாகனம் நிறுத்தும் இடம் , கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர பல்வேறு பணிகள் தற்போது இங்கு நடைபெற்று கொண்டு வருகிறது.

kodaikanal,tourists ,கொடைக்கானல் , சுற்றுலாப் பயணிகள்

இச்சூழலில் தூத்துக்குடியை சேர்ந்த 15 பேர் கொண்ட குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு வருகை புரிந்து நிலையில் தாங்கள் வருகை புரிந்த வேனை சாலையோரம் நிறுத்த முற்பட்டபோது பைன் மர சோலை அருகே மற்றொரு வேன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சுப்பையா என்பவர் உயிரிழந்தார் .இந்த விபத்தினால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. பெண்கள், குழந்தைகளுடன் 40க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இதன் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை தெரிவித்து உள்ளது.


Tags :