Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயற்சி... அமெரிக்க தொழிலதிபர் கருத்துக்கு கடும் கண்டனம்

இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயற்சி... அமெரிக்க தொழிலதிபர் கருத்துக்கு கடும் கண்டனம்

By: Nagaraj Mon, 20 Feb 2023 10:12:25 AM

இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயற்சி... அமெரிக்க தொழிலதிபர் கருத்துக்கு கடும் கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொழிலதிபர் ஜார்ஜ் சொரஸ் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து அதானி குழுமத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர்கள் சரிந்தது.

bjp,george soros,smriti-irani, ,ஜார்ஜ் சொரஸ், பாஜக, ஸ்மிருதி இரானி

இந்நிலையில் ஹங்கேரி-அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதானியின் வணிக சாம்ராஜ்யத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு, முதலீட்டு இடமாக இந்தியா மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது என்று ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க, மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, ஜார்ஜ் சோரஸ், பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் குறை கூறாமல், இந்திய ஜனநாயக அமைப்பையும் விமர்சித்துள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை அழிக்க 100 பில்லியன் டாலர் நிதியை உருவாக்கியிருப்பதாகவும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

Tags :
|