Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூயார்க்கில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க முயற்சி

நியூயார்க்கில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க முயற்சி

By: Nagaraj Sun, 27 Sept 2020 11:03:39 AM

நியூயார்க்கில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க முயற்சி

முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன... அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா தாக்கத்தால் உருவான திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் வரும் 30 ஆம் தேதி முதல் 25 சதவீத திறனுடன் உட்புற உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ள திறந்தவெளி உணவகங்களை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

officers,public,vehicular,pedestrian ,அதிகாரிகள், பொதுமக்கள், வாகனபோக்குவரத்து, நடைபாதை

இதன்பொருட்டு, வாகன போக்குவரத்து இல்லாத தெருக்களை உருவாக்கி நடைபாதையில் பொதுமக்கள் உணவருந்தும் வகையில் பொது இடங்களை மறு வடிவமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை வணிக செயல்பாடுகளிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நடைபாதை உணவங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதை நிரந்தரமாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

Tags :
|